என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கும்பாபிஷேக விழா"
- 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு.
- கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.
உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை வரும் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு, திரைப் பிரபலங்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
- ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்த்துள்ளது.
அதாவது, நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் அன்றைய தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மதுபான விற்பனை உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்தார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதோம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்துள்ளார்.
ஜெய்ப்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஹெரிடேஜ் மேயர் முனேஷ் குர்ஜார், கடந்த வாரம் ஜனவரி 22 அன்று நகரத்தில் உள்ள பாரம்பரிய பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜனவரி 19-ம் தேதி அறக்கட்டளைக்கு வில் நன்கொடையாக வழங்கப்படும்.
- வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநறிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 2.5 கிலோ எடையுள்ள வில்வம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
இது அயோத்தியில் உள்ள அமாவா ராமர் கோயிலால் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.
ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து அவருக்கு வில்லும் அம்பும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 19-ம் தேதி இவை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அமாவா ராம் கோயிலின் அறங்காவலரான ஷயான் குணால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வில் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு அம்புகளைப் பற்றிய விளக்கங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 200 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் வில்வத்தை தயாரித்துள்ளனர்.
2.5 கிலோ எடையுள்ள வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளாக கூறப்பட்டுள்ளது.
- டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது.
- ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறிவிப்பு.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குஜராத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள மேளம் சிறப்பு ரதத்தில் இன்று வந்தடைந்தது.
குஜராத்தின் கர்னாவதியின் தர்யாபூர் விரிவாக்கத்தில் உள்ள டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது என்று ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.
மேளத்தை இங்கு கொண்டு வந்த குழுவின் உறுப்பினர் சிராக் படேல் கூறுகையில், "இது தங்கம் மற்றும் வெள்ளி அடுக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேளம் அமைப்பு இரும்பு மற்றும் செப்பு தகடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த இசைக்கருவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரி கோயில் அறக்கட்டளைக்கு கடிதம் அனுப்பியதாக குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் ராவல் தெரிவித்தார்.
- ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம்.
- அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, "ஜனவரி 23 முதல் நாடு முழுவதும் உள்ள பக்தர்களை வரவேற்க தயாராக இருப்பதாக" தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்ட கோவின் கும்பாபிஷேகத்திற்காக பரபரப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கோயிலில் ராமரின் பழைய மற்றும் புதிய சிலைகள் வைக்கப்படும்.
குறிப்பாக, தேவையான அனைத்து சடங்குகளையும் பின்பற்றி, கோவிலில் பழைய மற்றும் புதிய இரண்டு சிலைகளையும் வைத்திருக்கிறோம். மற்ற அனைத்து சிலைகளும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் இங்கு கொண்டு வரப்படும்.
ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம். எந்த இடையூறும் இருக்காது. இங்கு நீங்கள் காணும் அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்படும்.
அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம் மற்றும் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது. இதற்காக, நாங்கள் பல மணிநேரம் ஆலோசித்து பணியாற்றுகிறோம்.
மகா கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
- ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகள்.
அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், நாளை அயோத்தியாவில் வால்மீகி விமான நிலையம் திறக்கப்படுகிறது.
ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகளின் 7 நாள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 16 : கோயில் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட புரவலர் மூலம் பரிகாரம், சரயு நதிக்கரையில் தசவித் குளியல், விஷ்ணு வழிபாடு மற்றும் கோடன் நடைபெறுகிறது.
ஜனவரி 17: ராம்லாலா சிலையுடன் அயோத்திக்கு ஊர்வலம் வரும், பக்தர்கள் மங்கள கலசத்தில் சரயு நீரைச் சுமந்து கோவிலை அடைவார்கள்.
ஜனவரி 18: கணேஷ் அம்பிகா பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன், வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.
ஜனவரி 19: அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் மற்றும் ஹவன்.
ஜனவரி 20: கோயிலின் கருவறையை சரயுவின் புனித நீரால் கழுவிய பின், வாஸ்து சாந்தியும், அன்னதானமும் நடைபெறும்.
ஜனவரி 21: 125 கலசங்களுடன் தெய்வீக ஸ்நானம் செய்த பிறகு, ஷயதிவாஸ் செய்யப்படும்.
ஜனவரி 22: காலை வழிபாட்டிற்குப் பிறகு, மதியம் மிருகசிர நட்சத்திரத்தில் ரமலாவின் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வருகை தர உள்ளதால், அயோத்தி நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அயோத்தி பயணத்தின் போது பிரதமர் மோடி 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- சோழவந்தான் அருகே சக்திவிநாயகர், பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின்னர் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. இந்த நிலையில் இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. மதுரை வீரராகவ பெருமாள் கோவில் பட்டர்கள் ரவி, வீர ராகவன் ஆகியோர் தலைமையில் சிவாச்சா ரியார்கள் யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து நான்காம் கால ஹோமம் நடந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சக்தி விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கொடிமங்கலம் கிரா மத்தில் பெரியபுன மங்கை என்ற பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் திருவிளக்குபூஜை, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடும், 2-ம் நாள் கோ பூஜை, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல், களை ஈர்ப்பு வழிபாடும், 3-ம் நாள் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. 4-ம் நாளில் நான்காம் கால யாகபூஜை நடந்து நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதா ளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்க ளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நாகமலை புதுக்கோட்டை போலீசார்
- கணபதி வேல்வியுடன் தொடங்கி காமதேனு வழிபாடு பூஜை நடைபெற்றது.
- கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து விண்ணப்பள்ளி ஊராட்சி பனங்காட்டு பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள்.
இக்கோவிலில் கடந்த ஐப்பசி மாதம் 24-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்ப ட்டது. அதைத்தொடர்ந்து கடந்த கார்த்திகை 5-ந் தேதி யாக சாலையில் கணபதி வேல்வியுடன் தொடங்கி காமதேனு வழிபாடு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து பவானி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பா றியினை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மேலும் 6-ந் தேதி கோபுரத்தில் கலசம் அமைத்தல் மற்றும் இறைவன் திருமேனிக்கு மருந்து சாத்துதல், தீர்த்த குடங்கள் யாகசாலைக்கு எடுத்து சென்று முதல் கால வேள்வி மங்கல இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து நேற்று 2-ம் கால வேள்வியை தொடர்ந்து கருவறையில் உள்ள மாகாளியம்மனுக்கு தெய்வத்திருமேனியில் நிலை பெற செய்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை காட்டப்பட்டது.
இதைக்கண்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடி இருந்து பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவி லில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜை கள் நடத்தினர்.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதி னெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்க ரிக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண் ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழி யும் நிலையில் உள்ளது. இந்த கும்பாபிஷேக நேரத் தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத் தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்ட ரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
விழா ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்கா ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
- எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், தோகை மலை அருகே காவல்காரன் பட்டியில் வடசேரி கிராமத்திற்குட்பட்ட ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது, விழாவில் அப்பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர் சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் சாமி கும்பிட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று மாலை இந்த பிரச்சினையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது, இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்தும், மற்றும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து தோகைமலை போலீசார் இரு தரப்பினரிட மும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்